சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என பாத்திமா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்தே கூறுகையில், சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று. சபரிமலையில், ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும். தற்போதைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது. சபரிமலை விவகாரத்தில், கடந்த 2018 ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல. 7 நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரணையில் உள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.