தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தாமே மனிதத்தின் எதிர்காலம் என்றும் நித்யானந்தா பேசி உள்ளார். பல்வேறு வழக்குகளுக்காக தேடப்பட்டு வரும் நித்யானந்தா எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் புதிதாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், உண்மையான கைலாசத்தை தாம் உருவாக்குவதாக கூறியுள்ளார். ஸ்ரீகைலாசா ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல என்றும், கைலாசா என்பது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம் என்றும் அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தானே மனித குலத்தின் எதிர்காலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.