பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்றாம் இடத்தைப்பிடித்தது. ‘‘கோவில் எதுக்குண்ணேன்… முதல்ல பள்ளிக் கூடம் கட்டு’’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர்.
அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு 13,500 மாணவிகளுமாக மொத்தம் 24297 பேர் தேர்வு எழுதினர். இதில் 23580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகரை தொடக்கத்தில் விருதுபட்டி என்று அழைத்தனர். அப்போது எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. பெருந்தலைவரின் சீரிய முயற்சியால் தமிழகம் முழுவதும் வெகுவேகமாக அதிக அளவில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கல்விபெற வேண்டும் என்று
காமராஜர் கனவு கண்டார்.
12ம் வகுப்பில் தமிழகத்திலேயே அதிக அளவில் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. பெருந்தலைவரின் கனவு அவரது மண்ணிலேயே பலித்ததாக கல்வியாளர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

பெருந்தலைவரின் கனவு பலித்தது